நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா இந்திய முஸ்லிம் சூராவ் அல்-முஸ்தகீமில் ஏற்படும் இட நெரிசலை தவிர்க்க மாநில அரசு உதவ வேண்டும்: தயுபு முகமத் கணி

மலாக்கா:

மலாக்கா இந்திய முஸ்லிம் சூராவ் அல்-முஸ்தகீமில் ஏற்படும் இட நெரிசலை தவிர்க்க மாநில அரசு உதவ வேண்டும்.

அச்சூராவ்வின் கட்டடக் குழுத் தலைவர் தயுபு முகமத் கணி இதனை கூறினார்.

மலாக்காவில் சூராவ் அல்-முஸ்தகீம் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றை கொண்டதாகும்.

மலாக்கா மாநில வரலாற்றில் இந்திய முஸ்லிம்கள் மிகவும் முக்கியமானவர்களாக உள்ளனர்.

அச்சமுதாயத்தின் அடையாளமாக இந்த சூராவ் உள்ளது.

இந்த சூராவ்வில் தொடர்ந்து இட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

குறிப்பாக நோன்பு காலத்தில் அதிகமான மக்கள் இங்கு தொழுகைக்கு வருவதால் இப்பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்று நோக்கி தான் சூராவ்வை பெரிதாக கட்ட வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முயற்சிக்கு மாநில அரசு முழுமையான அங்கீகாரத்தையும் அனுமதியும் வழங்கவில்லை.

இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கான இருக்கும் இந்த ஒரு சூராவ்வையும் பெரிதாக மாநில அரசு உதவாமல் இருப்பது எங்களுக்கு பெரும் வேதனையை தருகிறது.

சூராவ் தலைவர் ராபு இப்ராஹிம் தலைமையில்  அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் நாங்கள் பலமுறை சந்தித்து விட்டோம்.

ஆனால் எங்கள் பிரச்சினைக்கு மட்டும் தீர்வு பிறக்கவில்லை.

ஆகவே மாநில அரசு எங்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset