நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் காலத்தில் நாட்டில் உணவுப் பொருட்களின் கையிருப்பு போதுமான அளவிலுள்ளது: மாட் சாபு

கிள்ளான்:

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டில் உணவுப் பொருட்களின் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் சாபு உறுதியளித்துள்ளார்.

அரசாங்கமும் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகமும் விவசாயிகள், கோழி வளர்ப்பாளர்கள் மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் ஆகிய தரப்புகளுடன் இணைந்து நாட்டில் உணவுப் பொருட்களின் கையிருப்பை உறுதி செய்துள்ளது. 

பண்டிகை காலத்திற்கு முன்னதாக பல தசாப்தங்களில் பொருட்களின் விலைகள் அதிகரிக்காதது இதுவே முதல் முறை என்று அவர் கூறினார்.

"பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டது போல, நோன்பு பெருநாளுக்கு முன்னதாக விலைகள் உயராமல் இருப்பது இதுவே முதல் முறை என்று அவர் கூறினார்.

உள்ளூர் அரிசி தொடர்ந்து கிடைப்பதாகவும், போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உணவு விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க உணவு விநியோக நிலைத்தன்மை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

"உதாரணமாக, நீடித்த வறட்சி, பெரிய வெள்ளம் அல்லது கால்நடை நோய்கள் உணவு விநியோகத்தை பாதித்து விலைகளை உயர்த்தக்கூடும். இந்த ஆண்டு இதுபோன்ற இடையூறுகள் ஏற்படாதது நமக்கு அதிர்ஷ்டம் என்று அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset