நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியான்மர்-தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மியான்மர்-தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

நேற்று மத்திய மியான்மர், வடக்கு தாய்லாந்தைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி மாண்டோர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். 

கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் நிலையும் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் மிகவும் வருத்தமளிப்பதாக அன்வர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

தேவைக்கேற்ப மனிதாபிமான முயற்சிகளுக்கு உதவி வழங்கவும் ஆதரவளிக்கவும் மலேசியா தயாராக உள்ளது.

இந்தச் சூழலில் மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மலேசியாவும் அதன் அண்டை நாடுகளும் உதவவும் ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset