
செய்திகள் மலேசியா
இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்கள், சூராவ்கள் தான் சமுதாயத்தின் அடையாளங்கள்: டத்தோ வீரா ஷாகுல் தாவூத்
மலாக்கா:
இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்கள், சூராவ்கள் தான் சமுதாயத்தின் அடையாளங்கள் ஆகும்.
எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ரமலானை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இம்முறை நாடு முழுவதும் உள்ள நமது பள்ளிவாசல்கள், சூராவ்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இது அப்பள்ளிவாசல்கள், சூராவ்களின் நிலை என்ன, பிரச்சினைகள் என்ன என்பதை கண்டறிவது தான் இதன் முக்கிய நோக்கமாகும்.
அவ்வகையில் இப்பள்ளிவாசல்கள், சூராவ்களில் பல பிரச்சினைகள் உள்ளன.
என்னை பொறுத்த வரையில் இந்த பள்ளிவாசல்கள், சூராவ்கள் தான் இந்திய முஸ்லிம்களின் அடையாளம் ஆகும்.
நமக்குள் இருக்கும் பிரச்சினைகளில் இந்த அடையாளங்களை நாம் இழந்து விடக்கூடாது.
மேலும் இந்திய முஸ்லிம் சமுதாயம் பொருளாதாரத்துடன் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும்.
அதே வேளையில் ஒற்றுமை தான் சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்த ஒற்றுமை தான் சமுதாயத்தின் வெற்றிக்கு வித்திடும்.
மலாக்கா இந்திய முஸ்லிம் சூராவ் அல்-முஸ்தகீமில் நடைபெற்ற ரமலான் உதவிகள் வழங்கும் நிகழ்வில் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.
மலாக்கா இந்திய முஸ்லிம் சூராவ் அல்-முஸ்தகீமில் 150 பேருக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது.
பள்ளிவாசல் நிர்வாகம், மலேசிய இந்திய முஸ்லிம் இயக்கம், முக்மின் இயக்கம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த உதவி வழங்கப்பட்டது.
பிரெஸ்மா துணைத் தலைவர் டத்தோ மோசின் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 5:36 pm
ஜொகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி
March 31, 2025, 5:35 pm
ஹர்ஷீதாவின் அறுவை சிகிச்சைக்கு நன்கொடை அளித்த மலேசியர்களுக்கு நன்றி: செல்வ கணபதி
March 31, 2025, 5:34 pm
நோன்பு பெருநாளின் போது பணியில் ஈடுபடும் போலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டுகள்: ஐஜிபி
March 31, 2025, 5:32 pm
நோன்பு பெருநாளின் உணர்வைத் தழுவுங்கள்; மோதலைத் தவிர்க்கவும் - ஃபஹ்மி
March 31, 2025, 5:31 pm
காராக் சாலை விபத்துக்கு காரணமாக லோரி ஓட்டுநர் நான்கு நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்
March 31, 2025, 5:30 pm
ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
March 31, 2025, 11:44 am
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்த ஒரு தனிநபரையும் ஆலோசகராக நியமித்ததில்லை: அப்துல் ஹக்கிம்
March 31, 2025, 11:43 am
பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையை மலேசியா, துருக்கி தொடர்ந்து வலியுறுத்தும்
March 31, 2025, 11:42 am