நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தோசா வட்டாரத்தில் தூய்மை, பசுமை திட்டம்: 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கிள்ளான்:

செந்தோசா சட்டமன்ற தொகுதி மக்கள் தூய்மையுடனும் நலமுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கு இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஸு சி அறக்கட்டளையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை மறுசுழற்சி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு பல்வேறு வகையான மறுசுழற்சிப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்குப் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன.

செந்தோசா சட்டமன்ற தொகுதி ஏற்பாடு செய்த தூய்மை மற்றும் பசுமை திட்டத்தை கிள்ளான் மாநகர் மன்றத் துணைத் தலைவர் துவான் முகமட் ஸேரி எஃபெண்டி முகமட் அரிஃப் தொடக்கி வைத்தார்.

முகமட் ஸேரி அஃபெண்டிக்கு இச்சட்டமன்ற தொகுதி சார்பில் டாக்டர் குணராஜ் நன்றி தெரிவித்தார்.

இந்த வெற்றிக்குத் தங்களுடன் இணைந்து கைகோர்த்த குடியிருப்பாளர் சங்கம், ருக்குன் தெத்தாங்கா, அரசு சார்பற்ற இயக்கம், சொகா கக்காய் மலேசியா, சீட் ஆஃப் லவ் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் ஆகியோருக்கு இவ்வேளையில் தாம் நன்றி கூறிக் கொள்வதாகவும் டாக்டர் குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset