நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத்தின் சின்னம்: இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பக்ரீத் வாழ்த்துச் செய்தி 

புதுடெல்லி: 

ஹஜ்ஜுப் பெருநாளை ஒட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பக்ரீத் திருவிழாவை கொண்டாடும் வெளிநாட்டிலுள்ள அனைத்து சக குடிமக்களுக்கும், இந்தியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த திருவிழா தியாகத்தின் சின்னம். இது அன்பு, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய செய்திகளை நமக்கு உணர்த்துகிறது. 

மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவை செய்ய நமக்கு ஊக்கம் தருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் வளர்ச்சி, நலனுக்காக ஒன்றிணைந்து பாடுபட உறுதியேற்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset