நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து தரங்களின் முட்டைகளும் விலை குறைக்கப்படும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் இன்று முதல் ஏ, பி, சி வகை கோழி முட்டைகளின் விலை ஒரு முட்டைக்கு 3 காசுகள் குறைக்கப்படும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஏ, பி, சி வகை முட்டைகளின் சில்லறை விலை தற்போது முறையே ஒரு முட்டைக்கு 42 காசுகள், 40 காசுகள், 38 காசுகளாக உள்ளது.

ஒரு கோழி முட்டைக்கு 10 சென் என்ற மக்களின் உணவுத் தேவைகளுக்கு மானியம் வழங்குவது 100 மில்லியன் ரிங்கிட் செலவை உள்ளடக்கியது.

அதே நேரத்தில் 2023இல் கோழி முட்டைகளுக்கான மானிய ஒதுக்கீடு  927 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சபா, சரவாக், லாபுவான் ஆகிய இடங்களில் முட்டை விலை வர்த்தமானி மண்டலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset