நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சுங்கைப்பட்டாணி:

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு முதல் கெடா,  பினாங்கில் திட்டமிடப்பட்ட. குற்றச் செயல்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் ரமேஸ் கும்பலைச் சேர்ந்த மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும்  மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி நஜ்வா சே மாட் முன் 24 முதல் 42 வயதுக்குட்பட்ட அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் ஒரு மொழிபெயர்ப்பாளரால் தமிழில் வாசிக்கப்பட்டது.

அதன் பிறகு குற்றங்களை ஒப்புக் கொண்டதற்கான எந்த மனுக்களும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டுகளின்படி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜனவரி 2024 முதல் 2025 டிசம்பர் 4 வரை கெடாவின் கோலா முடா மாவட்டத்தில் உள்ள கம்போங் சுங்கை டிவிஷன் என்ற முகவரியில் ரமேஸ் கும்பல் திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பது கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset