நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி மீதான தண்டனையை எதிர்த்து நஜிப் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்

புத்ராஜெயா:

1 எம்டிபி மீதான தண்டனையை எதிர்த்து டத்தோஸ்ரீ நஜிப் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு 1 எம்டிபி வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 11.4 பில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நேற்று டிசம்பர் 29 ஆம் தேதி இரவு இந்த நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் முகமது ஃபர்ஹான் முகமது ஷாபி தெரிவித்தார்.

துணை அரசு வழக்கறிஞர் டத்தோ அஹ்மத் அக்ரம் கரிப்பும் இதை உறுதிப்படுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுவேரா வாசித்த தண்டனையை இந்த மேல்முறையீடு சவால் செய்கிறது.

அவர் நஜிப் நான்கு அதிகார துஷ்பிரயோகம், 2.3 பில்லியன் ரிங்கிட் அரசாங்க நிதியை உள்ளடக்கிய 21 பணமோசடி குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset