நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொக்சோ இழப்பீடுகள் முறையாக கிடைக்காமல் தவிக்கும் இந்தியர்களுக்கு டத்தோஸ்ரீ ரமணன் உதவ வேண்டும்: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

சொக்சோ இழப்பீடுகள் கிடைக்காமல் தவிக்கும் இந்தியர்களுக்கு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உதவ வேண்டும்.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் வலியுறுத்தினார்.

வேலை நேரத்திலும் பணி இடங்களிலும் ஏற்படும் விபத்துகளால் பல இந்தியர்கள் சொக்சோ இழப்பீடுகளுக்கு விண்ணப்பம் செய்கின்றனர்.

இருந்தாலும் அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. குறிப்பாக இழப்பீடுகள் கிடைப்பது இல்லை.

இந்த இழப்பீடுகள் கிடைக்காமல் மக்கள் ஏகப்பட்ட இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

நானே பல பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன். ஆனால் இப்பிரச்சினைகள் தொடர்ந்து இழுப்பறியாகவே உள்ளது.

இப்போது கூட என் அருகில் அமர்ந்திருக்கும் இளைஞர் ஈப்போவில் உள்ள பலகை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

வேலையிடத்தில் ஏற்படும் சத்ததால் இன்று அவருக்கு ஒரு காது கேட்காமலே போய்விட்டது.
இதனால் அவர் சொக்சோ இழப்பீடுகளுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் இது வரை அவருக்கு முறையான இழப்பீடுகள் கிடைக்கவில்லை.

சொக்சோ இழப்பீடுகளுக்கான மருத்துவ அறிக்கைகள் இருந்தும் அதிகாரிகளின் பேச்சு அலட்சியப் போக்கில் உள்ளது.

இதன் அடிப்படையில் தான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இருந்த மனிதவள அமைச்சர் இந்த பிரச்சினைகளை கொண்டு கொள்ளவே இல்லை.

தற்போது டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்

இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் அவர் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை என்க்கு உள்ளது என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset