நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ் ஆட்சிக் குழுவில் பாஸ் இடம் பெறாது; தேசியக் கூட்டணிக்கு தலைமையேற்க தயார்: தக்கியூடின்

கோலாலம்பூர்:

பெர்லிஸ் ஆட்சிக் குழுவில் பாஸ் கட்சி இடம் பெறாது என்று அதன் தலைமை செயலாளர் தக்கியூடின் ஹசான் கூறினார்.

பெர்லிஸ் மாநிலத்தின் புதிய  மந்திரி புசாராக அபு பக்கர் ஹம்சா பொறுப்பேற்றுள்ளார்.

அவரின் தலைமையில் அமைக்கப்படும் பெர்லிஸ் மாநில ஆட்சிக் குழுவில் அமரப் போவதில்லை.

இது பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகும்.

முன்னாள் மந்திரி புசார் முகமட் சுக்ரி ராம்லி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஒற்றுமையின் அடையாளமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

புதிய பெர்லிஸ் மந்திரி புசாரால் உருவாக்கப்படும் ஆட்சிக் குழுவில் பாஸ் உறுப்பினராக இருக்காது.

முந்தைய முன்னாள் மந்திரி புசார் ராஜினாமா செய்ததற்கு இணங்க, ஒற்றுமையின் அடையாளமாகவும், பாஸ் நிறுவனத்தில் தற்போதுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர்களாகவும் உள்ள அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

இதனிடையே தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் ராஜினாமா செய்துள்ளார்.

இதைத்  தொடர்ந்து, பாஸ் அக்கூட்டணியை வழிநடத்தத் தயாராக இருப்பதாக அதே அறிக்கையில் தக்கியூடின் அறிவித்தார்.

மாநிலத் தேர்தல், 16ஆவது பொதுத் தேர்தலுக்கான  அமைப்பையும் தயாரிப்புகளையும் வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று தக்கியூடின் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset