நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிவி 3இன் செய்தி சின்னத்தை பயன்படுத்தி போலியான பதிவு: எம்சிஎம்சி விசாரிக்கிறது

புத்ராஜெயா:

டிவி 3இன் செய்தி சின்னத்தை பயன்படுத்தி போலியான பதிவுகளை வெளியிட்ட விவகாரத்தை எம்சிஎம்சி விசாரிக்கிறது.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தொடர்பான சமூக ஊடகங்களில் டிவி 3இன் செய்தி சின்னத்தை காட்சி அடையாளத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்புவது குறித்து இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.

டிக் டாக் மலேசியா மூடப்படுவது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்ற தவறான தகவலை இது பரப்புகிறது.

முதற்கட்ட விசாரணையில் உள்ளடக்கம் மாற்றியமைக்கப்பட்டு போலியானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அந்த அறிக்கை தகவல் தொடர்பு அமைச்சரால் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்பதையும் அது வலியுறுத்தியது.

மீடியா பிரிமா பெர்ஹாட் நிறுவனமும் போலிஸ் புகார் அளித்துள்ளது.

அந்தப் பதிவை புலேட்டின் டிவி3 அல்லது நிறுவனத்தின் நெட்வொர்க்கின் கீழ் உள்ள எந்த செய்தி தளமும் வெளியிட்டதாக மறுத்துள்ளது.

டிவி 3இன் சின்னம், பெயர்,  காட்சி அடையாளத்தைப் பயன்படுத்துவது பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய ஒரு வகையான தவறான பயன்பாடு என்று எம்சிஎம்சி ஓர் அறிக்கையில் வலியுறுத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset