செய்திகள் மலேசியா
போலிஸ்காரர் போல் நடித்து மோசடி: RM7.5 லட்சம் இழந்த பெரியவர்
கோத்தா திங்கி:
காவல் அதிகாரியாக நடித்து தொலைபேசி மூலம் மோசடி செய்த நபரிடம் தனது ஏடிஎம் அட்டைகளை ஒப்படைத்ததால், 60 வயதுடைய முதியவர் ஒருவர் சுமார் RM7.5 லட்சம் இழந்துள்ளார்.
வேலை இல்லாத நிலையில் உள்ள அந்தப் பாதிக்கப்பட்ட நபரை, கடந்த செப்டம்பர் மாதம் சந்தேகநபர் தொடர்பு கொண்டு, அவரது பெயர் சட்டவிரோத பணமோசடி (money laundering) வழக்குடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக கூறியதாகத் கோத்தா திங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் (OCPD) சூப்பிரண்ட் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவவும், தன்னைக் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கவும் , தமது இரண்டு ஏடிஎம் அட்டைகளின் தகவல்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு அந்த மோசடியாளர் பாதிக்கப்பட்ட நபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விசாரணை முடிந்த பின்னர், பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
பின்னர், தனது வங்கிக் கணக்குகளில் இருந்து அனுமதியின்றி பலமுறை பணம் எடுத்துக் கொள்ளப்பட்டதை ஏமாற்றப்பட்டவர் கண்டறிந்தார்.
இவ்வாறு தனது கணக்கிலிருந்து மொத்தமாக சுமார் RM7.5 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த மோசடியாளர் பணத்தைத் திருப்பி வழங்கவோ, கூறப்பட்ட விசாரணை குறித்து எந்த உறுதிப்படுத்தலையும் வழங்கவோ இல்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் திங்கட்கிழமை (டிசம்பர் 29) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு, குற்றச் சட்டத்தின் பிரிவு 420 (ஏமாற்றுதல்) கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
போலி அமலாக்க அதிகாரிகளாக நடித்து ஏமாற்றும் நபர்களிடம் பொதுமக்கள் எளிதில் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என சூப்பிரண்ட் யூசோஃப் அறிவுறுத்தினார்.
மேலும், வணிகக் குற்ற விசாரணைத் துறையின் (Commercial Crime Investigation Department) அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடர்ந்து, சமீபத்திய மோசடி யுக்திகள் குறித்து பொதுமக்கள் தகவலறிந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 9:50 pm
பகலில் ஐஸ் லாரி ஓட்டுநர், இரவில் கொள்ளையன்: ஜொகூரில் 16 சம்பவங்கள் அம்பலம்
December 30, 2025, 9:45 pm
வேல் வழிபாடு முருக வழிபாட்டில் மிகத் தொன்மையானதுடன் முக்கியத்துவம் வாய்ந்தது: டத்தோ சிவக்குமார்
December 30, 2025, 8:18 pm
ஈப்போவில் அடுத்தடுத்து தீ விபத்துகள்: 6 வீடுகள் சாம்பல்
December 30, 2025, 4:13 pm
தேசியக் கூட்டணி தலைவர் பதவிப் பிரச்சினை உச்சமன்ற குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படும்: பாஸ்
December 30, 2025, 4:12 pm
பெர்லிஸ் ஆட்சிக் குழுவில் பாஸ் இடம் பெறாது; தேசியக் கூட்டணிக்கு தலைமையேற்க தயார்: தக்கியூடின்
December 30, 2025, 1:27 pm
டிவி 3இன் செய்தி சின்னத்தை பயன்படுத்தி போலியான பதிவு: எம்சிஎம்சி விசாரிக்கிறது
December 30, 2025, 1:27 pm
