நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் பதவி விலகல்: ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

கோலாலம்பூர்:

டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் பதவி விலகல் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.

தேசியக் கூட்டணியை  ஐந்து ஆண்டுகள் வழிநடத்திய பிறகு,  டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த பதவி விலகல்  வரும் ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கும் வரும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்பு முகநூலில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் மூலம்,

முன்னாள் பிரதமர் தனது கூட்டணியின் தலைமையின் போது அனைத்து  தலைவர்களும் அளித்த ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

மொஹைதின் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் இக்கூட்டணியை வழிநடத்தி வருகிறார்.

அதாவது அக்கூட்டணி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து அவர் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset