நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் அடுத்தடுத்து தீ விபத்துகள்: 6 வீடுகள் சாம்பல்

ஈப்போ:

ஈப்போ நகரைச் சுற்றிய பகுதியில் இன்று ஏற்பட்ட இரண்டு தனித்தனி தீ விபத்துகளில், ஆறு அடுக்குமாடி வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியதுடன், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் தற்காலிக இடப்பெயர்வு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

பேராக் மாநில மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு துணை இயக்குநர் ஷாஸ்லீன் முஹம்மது  ஹனாஃபியா கூறுகையில், முதல் தீ விபத்து ஜாலான் சுல்தான் நஸ்ரின் ஷா பகுதியில் உள்ள நேஷனல் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்டதாகவும், மதியம் 1.49 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

“சம்பவ இடத்தை அடைந்தபோது, மூன்று வீடுகளில் தீ மிக வேகமாகப் பரவி கொண்டிருந்தது; பின்னர் அது மேலும் மூன்று வீடுகளுக்கும் பரவியது.

சில வீடுகள் பூட்டப்பட்டிருந்ததும், இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததாலும் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாலை 2.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, மாலை 5.49 மணிக்கு முழுமையாக நடவடிக்கை முடிவடைந்ததாகவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, பிற்பகல் 4 மணியளவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், மெங்லெம்பு பகுதியில் உள்ள கம்போங் குவாலா பாரி ஹிலிர், ஜாலான் முகம்மது ரஷீத் சாலையில் அமைந்த ஒற்றை மாடி நான்கு வரிசை வீடுகளும் தீக்கிரையானதாக அவர் கூறினார்.

“இதில், இரண்டு வீடுகள் சுமார் 90 சதவீதம் சேதமடைந்துள்ளதாகவும், மற்ற இரண்டு வீடுகள் 30 முதல் 50 சதவீதம் வரை சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர், மாலை 6 மணிக்கு திறக்கப்பட்ட கம்புங் குவாலா பாரி சமூக மண்டபத்தில் அமைந்த தற்காலிக இடம்பெயர்வு மையத்தில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

- கிரித்திகா
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset