நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னர், அரசியார் தியாகப் பெருநாள்  வாழ்த்துகளை தெரிவித்தனர்

கோலாலம்பூர்:

நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஸரித் சோஃபியா தியாகப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தியாகத்தை முழுமையாக நிறைவேற்றவும், இறை பொருத்தத்தை பெறவும் நமது பிரார்த்தனைகளை அல்லாஹ்  ஏற்றுக் கொள்ளவும் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.

புனித பூமியில் உள்ள மலேசிய பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வழிபடவும், அவர்களுடைய ஹஜ் மாப்ருர் ஆக இறைவன் ஏற்றுக்கொள்ளவும்  நான் பிரார்த்திக்கிறேன் என்று பேரரசர் கூறியுள்ளார். 

இந்த அன்பான நாடு தொடர்ந்து செழிப்புடன் இருக்க நாமும் ஒன்றாகப் பிரார்த்திக்கிறோம் என்று மாமன்னர் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset