நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்த ஆண்டு 1.8 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்ற வந்துள்ளனர்: சவூதி அரேபியா 

கோலாலம்பூர்:

உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 1,833,164 முஸ்லிம்கள் இந்த ஆண்டுக்கான  ஹஜ் யாத்திரையை  நிறைவேற்றி வருகின்றார்கள் என்று சவூதி அரேபியாவின் புள்ளி விபரங்களுக்கான பொது ஆணையம் கூறியுள்ளது.

மக்காவில் உள்ள ஊடகங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி,மொத்தம் 958,137 ஆண்களும்  875,027 பெண்களும் புனிதப் பயணிகளாக சவூதி அரேபியா வந்துள்ளார்கள். அவர்கள் தமது கடமைகளை தடங்கலில்லாமல் நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பயணிகள் இல்லாமல் உள் நாட்டு யாத்ரீகர்கள் 221,854 ஆகவும் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

அரபு நாடுகளைத் தவிர்த்து ஆசியாவில் இருந்து வரும் யாத்ரீகர்களின் சதவீதம் 63.3 சதவிகிதம் பேர் என்று அவ்வானையம் கூறியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset