நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளியில் படித்து சாதனை செய்துவரும் 50 மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்

ஈப்போ:

தமிழ்ப்பள்ளிகளில் ஆரம்ப கல்வியை தொடக்கிய மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் கல்வி, விளையாட்டுத்துறை, இணைப்பாட நடவடிக்கைகள், அனைத்துலக, தேசிய, மாநில, மாவட்ட ரீதியில் பள்ளியை பிரதிநிதித்த 50 மாணவர்களுக்கு சாதனை விருது வழங்கி சிறப்பித்ததாக பேராக் மாநில அமால் மக்மூர் சமூகநல இயக்க செயலாளரும், ஏற்பாட்டுக்குழு தலைவருமான நாச்சிமுத்து கருப்பண்ணன் கூறினார்.

இந்நிகழ்வில், பிரிந்தா குமரன், அல்வின் அர்வின் ஆகிய இரு மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். தங்கப்பதக்கத்தை சிலிபின் சித்தி ஐஷா சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அன்வார் இப்ராஹிம் அன்பளிப்பு செய்தார் என்று அவர் குறிப்பிட்டார்.

May be an image of 6 people, dais and text

அதுமட்டுமின்றி, மறைந்த "தோக்கோ குரு" டத்தோஸ்ரீ என்.எஸ். செல்வமணியை நினைவு கூரும் வகையில்  மாணவர்களுக்கு நினைவு சின்னங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் முத்தாய்ப்பு அங்கமாக, பணிஓய்வு பெற்ற தைப்பிங் டாருல் ரிட்சுவான் இடைநிலைப்பள்ளியின் துணை தலைமையாசிரியர் ரவீந்திரனுக்கு தக்கார் சிறப்பு வழங்கப்பட்டது. தமிழ்ப்பள்ளியில் படித்து மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பின் முதுகலைக்கல்வியை பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் கற்றவர். இவரது மூன்று பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள் என்று அவர் எடுத்துரைத்தார்.

May be an image of 14 people and text

இந்நிகழ்வின் சிறப்பு பிரமுகர்களான, டாக்டர் சிவநேசன் மாநில சுகாதார இலாகா , எம் அர்ஜுணன் பேராக் மாநில கல்வி இலாகா, முனைவர் டத்தோ டாக்டர் எஸ். செல்லையா ஸ்குவாஷ் பல்கலைக்கழகம், நாட்டின் தலைசிறந்த கால்பந்து சாதனையாளர் டத்தோ எம்.கருத்து, பேராக் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற தலைவர் பழனி சுப்பையா, டாக்டர் பிலிப் ராஜன் ஈப்போ பெரிய மருத்துவமனை, டத்தோ டாக்டர் ஜஸ்விண்டர் சிங் கே பி. ஜே ஈப்போ, சொக்சோ இயக்குநர் மோகன்தாஸ், முனைவர் நா.சுப்பையா உப்சி, டத்தோ அன்வார் இப்ராஹிம், குமரன் திணைக்கள துணை இயக்குநர் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கினர்.

நிகழ்வில், முனைவர் சேகர் நாராயணன், துணைதலைமையாசிரியர் ரவீந்திரன் ஆகியோரின் தன்முனைப்பு உரை வருகையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset