செய்திகள் மலேசியா
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
ஜோகூர் பாரு:
ஜோகூர் குடிவரவு துறை மேற்கொண்ட நள்ளிரவு சோதனையில், ஸ்குடாய் பகுதியில் 41 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ச்சியான கண்காணிப்பின் அடிப்படையில் இரவு 11 மணியளவில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், இரண்டு மாடி வணிக வளாகத்தின் மேற்பகுதியில் தங்கியிருந்த இவர்கள் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் பிடிபட்டனர்.
ஜோகூர் குடிவரவு துறை இயக்குநர் டத்தோ முஹம்மத் ருஸ்டி முஹம்மத் தரஸ் தெரிவிக்கையில், 16 முதல் 49 வயதுக்குட்பட்ட 7 இந்தோனேசிய ஆண்கள், 4 பெண்கள், 19 மியான்மர் ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம் 41 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறினார்.
சோதனையில் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமலும், அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டியும் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் குடிவரவு சட்டம் 1959/63-இன் கீழ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும் என குடிவரவு துறை எச்சரித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 10:20 pm
பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி
April 15, 2026, 10:19 pm
ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்
April 15, 2026, 10:19 pm
டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது
April 15, 2026, 7:26 pm
டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்
April 15, 2026, 6:49 pm
தேலண்ட் கோர்ப் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்
April 15, 2026, 6:46 pm
ரோஸ்மாவுக்கு எதிரான நகை வழக்கு: ஜூன் 10-ஆம் தேதி தீர்ப்பு
April 15, 2026, 6:45 pm
டிரம்பின் நடவடிக்கைகள் உலகப் போரைத் தூண்டக்கூடும்: துன் மகாதீர் எச்சரிக்கை
April 15, 2026, 4:27 pm
