
செய்திகள் கலைகள்
நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடமியின் ஏற்பாட்டில் நற்சான்றிதழ் வழங்கும் விழா: ஜூலை 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது
கோலாலம்பூர்:
நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடமியின் ஏற்பாட்டில் நற்சான்றிதழ் வழங்கும் விழா அடுத்த மாதம் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி பிரிக்ஃபீல்ட்ஸ் சுபாஷ் சந்திரபோஸ் விஸ்தா சென்ட்ரலில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடமியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் முதல்நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை தமிழிசை சங்கம் நடத்திய தேர்வில் அகாடமியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களைக் கௌரவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கப்படும் என்று அகில மலேசிய நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்கள் இயக்கத்தின் தலைவர் திரு. ஆ.கணேசன் பிள்ளை கூறினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அகில மலேசிய நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் இயக்கத்தின் பெருமுயற்சியில் இந்த நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடெமி தோற்றுவிக்கப்பட்டது.
மலேசியாவில் நாதஸ்வர தவில் இசை கலையை அழியாமல் பாதுகாக்கவும் பல நாதஸ்வர தவில் இசை கலைஞர்களை எதிர்காலத்தில் உருவாக்கவும் இந்த அகாடமி உருவாக்கப்பட்டது. தற்போது நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடமியில் 30 மாணவர்கள் இருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், சென்னை தமிழிசை சங்கத்துடன் இணைந்து அவர்கள் வழங்கிய நாதஸ்வரம் & தவில் இசையின் பாடத்திட்டங்களைப் நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடமியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
காரணம், சென்னை தமிழிசை சங்கம் 70 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சங்கமாக இருக்கிறது மேலும், பல நாதஸ்வர தவில் வித்துவான்களை உருவாக்கி உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அகாடமியில் நான்கு வயது முதல் அறுபது வயது வரையிலான மாணவர்கள் இருக்கின்றனர். வேலை செய்கின்றவர்களும் தங்களின் பொழுதுபோக்குக்காக இந்த நாதஸ்வரம் & தவில் இசையை கற்று வருகின்றனர். இந்த நாதஸ்வரம் & தவில் இசை நுண்கலையின் வாயிலாக மாணவர்கள் டிப்ளோமா முதல் முனைவர் பட்டப்படிப்பு வரை மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
ஆக, பொதுமக்கள் தாராளமாக நாதஸ்வர தவில் இசை நுண்கலை அகாடமியின் ஏற்பாட்டிலான நற்சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி ஏற்பாட்டு குழு சார்பாக திரு. ஆ. கணேசன் பிள்ளை கேட்டுக்கொண்டார்.
மேல் விபரங்களுக்கு அகில மலேசிய நாதஸ்வர தவில் கலைஞர்கள் இயக்கத்தின் தலைவர் திரு. ஆ.கணேசன் பிள்ளை ( 014-338 8756 ) அல்லது அறங்காவலர் திரு. குணசீலன் தம்பிநாதன் (012-334 2456) அல்லது அட்மின் மெனெஜர் திருமதி. இந்திராணி கணேசன் (016-4511791) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 11:04 am
பாக்கிஸ்தான் நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm