நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குவைத்தில் கேரளா தொழிலதிபர் கட்டிடத்தில் தீ: 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் பலி 

குவைத்:

குவைத் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் கருகி பலியாகி உள்ளனர். 

இவர்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 பேர், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் என தெரியவந்துள்ளது.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரத்தில்  6 மாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த கட்டிடமானது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்குச் சொந்தமானது. 

இக் கட்டிடத்தில் வீட்டு பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

இதே பகுதியில் 200க்கும் அதிகமான தமிழர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்களும் தங்கி இருந்தனர். 

ஆபிரகாமுக்குச் சொந்தமான கட்டிடத்தில் பற்றிய தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. 

இதனால் மாடிகளில் தங்கியிருந்தவர் தீயில் சிக்கியும் மூச்சுவிட முடியாமலும் திணறினர். 

இத்தீவிபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் கருகி பலியாகினர். இவர்களில் 2 பேர் தமிழர்கள். 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். வட இந்தியர்கள் 3 பேர் என தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset