நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமான விபத்தில் மலாவி துணை அதிபர் மரணம்

மலாவி:

விமான விபத்தில் மலாவி துணை அதிபர்சௌலோஸ் கிளாஸ் உட்பட அவருடன் பயணம் செய்த 9 பெரும் விமான விபத்தில் மரணமடைந்ததாக அந்நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.

நேற்று மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் கிளாஸ் சிலிமா பயணம் செய்த விமானம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மலாவி துணை அதிபர் சௌலோஸ் உட்பட ஒன்பது பேர் பயணம் செய்த ராணுவ விமானம் மலாவி தலைநகர் லிலோங்கிலிருந்து காலை 9.17 மணிக்கு புறப்பட்டது.

லிலோங்கில் புறப்பட்ட ராணுவ விமானம் சூசு விமான நிலையத்தில் காலை 10.02 மணிக்குத் தரையிறங்கியிருக்க வேண்டும்.

இதை தொடர்ந்து விமானம் ராடாரிலிருந்து மாயமாகி இருக்கின்றது.

மாயமான விமானம் மலைப்பகுதிகளில் மோதி நொறுங்கியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், மலாவியின் துணை அதிபர் மற்றும் அவருடன் பயணம் செய்த 9 பெரும் விமான விபத்தில் மரணமடைந்ததாக அந்நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset