
செய்திகள் உலகம்
ஸ்ரீலங்கன் விமானப் பயணிகளுக்கு உணவுடன் இனி உப்பும் மிளகும் வழங்கப்படாது: விமான நிறுவனம் அறிவிப்பு
கொழும்பு:
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளுக்கு இனி உப்பும் மிளகும் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த விமானத்திலும் சுவையான உணவு கிடைப்பது சகஜம். அதேபோன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸும் இதுபோன்ற சுவையான உணவை விமானத்தில் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
கடந்த ஆண்டு இறுதியிலிருந்து, ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ என்ற தேசிய விமான நிறுவனம் தனது விமானங்களில் Economy class பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு, உப்பு பொட்டலங்களை வழங்குவதை நிறுத்தியதாகவும், பயணிகளின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே அவற்றை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், Economy class பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுக்காக மிளகு, உப்பு பொதிகள் நிறுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த இரண்டு பொருட்களும் வணிக வகுப்பினருக்கு மட்டும் தொடர்ந்து தடையில்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கருப்பு மிளகு மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களுடன் ஒப்பிடும் போது அதிக “பைப்பரின்” உள்ளடக்கத்தை கொண்டுள்ளது.
மிளகாயின் கசப்பான, காரமான சுவையைக் கொடுக்க பைப்பரின் என்ற கலவை பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் சிறிய பொதிகளில் மிளகும் உப்பும் வழங்கியது, ஆனால் Economy class பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவில் இருந்து உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை நீக்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்குக் காரணம், Economy classல் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் மிளகு, உப்பு பயன்படுத்தாததால், பயன்படுத்தப்படாத பாக்கெட்டுகளை கழிவுகளாக வீச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எனவே அவற்றை விநியோகிப்பதை நிறுத்தியுள்ளதாக அந்த விமான நிறுவனம் கூறியுள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm