நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலியருக்கு துப்பாக்கி விநியோகித்த கணவன், மனைவி மீதான வழக்கு: ஜூலை 11ஆம் தேதி மறுவிசாரணை

கோல சிலாங்கூர்:

இஸ்ரேலியருக்கு துப்பாக்கி  விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவன், மனைவி தொடர்பான வழக்கை ஜூலை 11ஆம் தேதி மறுவிசாரணை செய்யப்படும்.இதற்கான உத்தரவை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கியது.

குற்றம் சாட்டப்பட்ட ஷரீபா ஃபராஹா சையத் ஹுசின் (41), அப்துல் அசிம் முஹம்மது யாசின் (43) ஆகியோர் இன்று காலை 9.30 மணிக்கும் 9.50 மணிக்கும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

இன்றைய வழக்கு விசாரணையில் துணை அரசு வழக்கறிஞர் ஃபசீதா ஃபாயிக், தனது தரப்பு இன்னும் சில ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜூன் 2 ஆம் தேதி ஷரிஃபா ஃபராஹாவின் சார்பாக தனது தரப்பு ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்றது,

மேலும் அடுத்த நடவடிக்கைக்காக ஆராயப்பட்டு வருவதாகவும் ஃபசீதா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset