நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேப்டன் பிரபா கும்பலைச் சேர்ந்த மூவர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மறைந்திருந்தனர்

கோலாலம்பூர்:

ஆப் ஜாக் ஸ்பாரோ மூலம்  போலீசாரால் கைது செய்யப்பட்ட கேப்டன் பிரபாவின் மூன்று உறுப்பினர்கள் இந்தியாவையும் தாய்லாந்தையும் தங்கள் மறைவிடங்களாக கொண்டிருந்தனர்.

ஆதாரங்களின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அதிகாரிகளால் தேடப்பட்ட பின்னர் தப்பிச் சென்ற மூன்று குற்றவாளிகள், சம்பந்தப்பட்ட இரு நாடுகளிலும் மறைந்திருந்தனர்.

கைதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் அடிக்கடி இந்த இரண்டு நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்றனர்.

ஆனால்  இங்கிலாந்தில் நுழைய அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால், அங்குள்ள அதிகாரிகள் அவர்களை தேடப்படும் குற்றவாளிகள் என்று கண்டறிந்ததால் இறுதியாக கைது செய்யப்பட்டனர்.

விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் ஏன் இங்கிலாந்துக்கு சென்றார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

இருப்பினும் சம்பந்தப்பட்ட குழுவின் தலைவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். மேலும் பலர் தேடப்படுகின்றனர் என கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset