நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனைவிக்கு விமான டிக்கெட் வாங்க கையூட்டு பெற்றதாக ஆயுதப்படையின் முன்னாள்  பாதுகாப்பு புலனாய்வுத் துறை இயக்குநர் மீது குற்றம் சாட்டப்பட்டது

கோலாலம்பூர்:

மனைவிக்கு விமான டிக்கெட் வாங்க 20,000 அமெரிக்க டாலர், 64,000 ரிங்கிட் கையூட்டு பெற்றதாக முன்னாள் பாதுகாப்பு புலனாய்வுத் துறை இயக்குநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மலேசிய ஆயுதப்படை முன்னாள் பாதுகாப்பு புலனாய்வு இயக்குநர் ஜெனரல் டத்தோ முகமட் ரசாலி அலியாஸ் இக்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

இவர்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவிக்கு வெளிநாட்டு விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக 20,000 அமெரிக்க டாலர், 64,600 ரிங்கிட் கையூட்டு பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

காலை 8.35 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்த 60 வயதான முகமட் ரசாலி தாம் குற்றமற்றவர் என கூறினார்.

மேலும் மூன்று குற்றச்சாட்டுகளும் நீதிபதி சுசானா ஹுசின் முன் வாசிக்கப்பட்ட பிறகு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்.

குற்றச்சாட்டுகள் எனக்குப் புரிகிறது. ஆனால் நான் குற்றமற்றவன்.

இந்த வழக்கு  விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset