நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலைவாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை; அன்னியத் தொழிலாளர்களைக் குறைக்க அரசு தீர்மானம்: ரமணன்

கோலாலம்பூர்:

நாட்டின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 15% என்ற சதவீதத்தை தாண்டியதால், அவர்களின் வருகையை அரசு கடுமையாக்குகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ராமணன் தெரிவித்தார்.

இந்த நிலை உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகளை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

2026–2030 காலத்திற்கான 13-ஆவது மலேசியத் திட்டம் (RMK13) கீழ், 2030-க்குள் வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்கை 10% ஆகவும், 2035-க்குள் 5% ஆகவும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்துறை அமைச்சரும் மனிதவள அமைச்சரும் இணைந்த குழு மூலம் அன்னியத் தொழிலாளர்கள் கண்காணிப்பு வலுப்படுத்தப்படுகிறது.

வெளிநாட்டு தொழிலாளர்களை முதலாளிகள் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், உள்ளூர் பணியாளர்களை நியமிக்க ஊக்கம் அளிப்பதுடன், ஆட்டோமேஷன், தொழில்நுட்ப பயன்பாடு பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் பல்வேறு படிநிலைகளில் வெளிநாட்டு தொழிலாளர் வரியை அமல்படுத்தி வருகிறது" என்று அவர் நாடாளுமன்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

இந்த முழுமையான அணுகுமுறை தொழிலாளர் சந்தையை சமநிலையுடனும் நிலைத்தன்மையுடனும் உருவாக்கி, நாட்டின் பொருளாதார போட்டித்திறனை பாதிக்காமல் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகளை முன்னுரிமை அளிக்கும் என அவர் வலியுறுத்தினார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset