நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

26 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலப்பட்டா; பேரா அரசு வழங்கியது: சிவநேசன்

சுங்கை சிப்புட்:

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சங்காட் சாலாக் , கமிரி தோட்டங்களின் முன்னாள் தொழிலாளர்களுக்கு வீடு மனை நிலப்பட்டா வழங்கியது.

அவ்விரு தோட்டங்களில் இருந்து வெளியேறிய முன்னாள் தொழிலாளர்கள் தங்களுக்கு குடியிருக்க நிலம் கேட்டு 26 ஆண்டுகாலமாக நடத்திய போரட்டத்திற்கு விடுவு காலம் பிறந்தது.

சுங்கை சிப்புட் மாவட்ட அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நிலப்பட்டா வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ அ. சிவநேசன் பாதிக்கப்பட்ட 34 குடும்பங்களுக்கு நிலப்பட்டாவை எடுத்து வழங்கினார்.

நாட்டில் உள்ள பல தோட்டங்கள் ரப்பர் பயனீட்டில் இருந்து செம்பனை பயிர் செய்யப்பட்டபோது பலர் வேலையில் இருந்து வெளியேறினர்.

இதில் பாதிக்கப்பட்ட சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த சங்காட் சாலாக் மற்றும் கமிரி தோட்ட மக்களும் அடங்குவர்.

வீடிழந்து வெளியேறிய அவர்கள் தங்களுக்கு நிலம் வேண்டும் என்று நடத்திய போராட்டத்திற்கு இன்று பலன் கிடைத்தது.

பாதிக்கபட்ட 34 குடும்பங்களுக்கு மாநில அரசு நிலம் வழங்கியதாக குறிப்பிட்ட அவர் தாம் மாநில ஆட்சிக் குழுவில் நியமனம் செய்யபழப்பட்ட நாள் முதல் இது வரை அரசாங்க நிலங்களில் வசித்து வந்த 90 விழுக்காடு இந்தியர்களின் நிலப் பிரசனைகளுக்கு தீர்வுக் கானப்பட்டதாக தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset