நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 737 சொகுசு கார்கள் பறிமுதல்: சூல்கிப்லி

ஜார்ஜ்டவுன்:

பினாங்கில் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 737 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பினாங்கு மாநில ஜேபிஜே இயக்குனர் சூல்கிப்லி இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை கடந்த ஆண்டு முழுவதும் செல்லுபடியாகாத  சாலை வரி, காப்பீடு இல்லாததற்காக வாகனங்கள் மீதான சோதனைகளை நடத்தியது.

இந்த Ops Luxury சோதனையின்  மூலம் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 73 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் பிஎம்டபள்யூ கார்கள் அதிகபட்சமாக 23 ஆக பதிவாகியுள்ளன.

மேலும் போர்ஷே டெய்கான்,  ரோல்ஸ் ராய்ஸ், மினி கூப்பர், லோட்டஸ் எலெட்ரே எஸ் உள்ளிட்ட பல சொகுசு பிராண்டுகளுக்கு கூடுதலாக  உள்ளது.

வாகன உரிமையாளர்களின் நடவடிக்கைகள் அரசாங்க வருவாயில் 146,204  ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் வாகனங்கள் ஆண்டுக்கு அதிகபட்ச சாலை வரி விகிதமான 54,000 ரிங்கிட்டை பதிவு செய்தாலும், அவற்றை செலுத்த பலர் தவறிவிட்டனர் என்று அவர் கூறினார்.4

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset