நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்கூட்டியே ஓய்வு பெறும் ஆசிரியர்களின் முடிவு குறைந்து வருகிறது: ஃபட்லினா

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் ஆசிரியர்களிடையே முன்கூட்டியே ஓய்வு பெறும் முடிவு குறைந்து வருவதைக் காட்டுகிறது.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

இதனால் கற்பித்தல் ஊழியர்களின் நிலைத்தன்மை, பள்ளிகளில் கற்பித்தல் தரம் குறித்து நேர்மறையான சமிக்ஞையை அளிக்கிறது.

பொது சேவைத் துறையால் விருப்ப ஓய்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 2024 இல் 5,082 பேர் அல்லது 1.17 சதவீதமாக இருந்த நிலையில், 2025 இல் 4,271 பேர் அல்லது 0.99 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும் பொது சேவைத் துறையால் விருப்ப ஓய்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் போக்கைக் காட்டியுள்ளது என்று அவர் விளக்கினார்.

இது கற்பித்தல் சேவையில் நிலைத்தன்மையின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

ஆசிரியர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களின் போக்கு, முன்கூட்டியே ஓய்வு பெறுதல், புதிய ஆட்சேர்ப்பு,  தேசிய கல்வியின் தரத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட புள்ளி விவரங்கள் குறித்து டத்தோஸ்ரீ டோரிஸ் சோபியா அனக் பிராடி எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset