நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரிப்பு

ஜொகூர் பாரு:

ஜொகூர் மாநிலத்தில் கடந்த 8 வாரங்களில் கோவிட்-19 தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் உறுதிப்படுத்தினார்.

இம்மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 263 கோவிட்19 பாதிப்புகள் ஜொகூரில் பதிவாகியுள்ளது.

அதற்கு முந்திய வாரத்தில் 249  சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

ஏப்ரல் 15 முதல் 21 வரை 109 கோவிட்19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கு முந்திய வாரம் 34 சம்பவங்கள் மட்டுமே பதிவாயின.

கடந்த 3 வாரங்களில் பதிவான பெரும்பாலான கோவிட்19 சம்பவங்கள் ஜொகூர் பாரு, பத்து பஹாட், கூலாய், மூவார் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றன.

14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கும்படியும் கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியும்படியும் மக்களுக்கு ஆலோசனை தரப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset