நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆர்.டி.எஸ் இணைப்பு திட்டம் குறித்து துன் மகாதீருக்கு விளக்கமளிக்கத் தயார்: அந்தோனி லோக்

ஜார்ஜ் டவுன்:

ஜொகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் இடையே ஆர்.டி.எஸ் இணைப்பு திட்டம் குறித்துத் தொடர்பாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுக்கு விளக்கமளிக்க தாம் தயார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

திங்களன்று தனது முகநூலில் ஒரு பதிவில் டாக்டர் மகாதீர் எழுதிய கருத்துகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அந்தோனி லோக் இவ்வாறு கூறினார்.

அவர் 7-ஆவது பிரதமராக இருந்தபோது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தை டாக்டர் மகாதீர் மறந்துவிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்தப்போது நான், இந்த RTS திட்டத்தைத் தொடர அமைச்சரவை ஆவணத்தைச் சமர்ப்பித்து அதற்கு துன் மகாதீர் அவர்களே ஒப்புதல் அளித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதனை அவர் மறந்து இருக்கலாம். அதனால் இது குறித்து அவருக்குச் சிறப்பு விளக்கமளிக்க தாம் தயார் என்று அந்தோனி லோக் குறிப்பிட்டார்.  

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset