செய்திகள் உலகம்
SQ321 விமானச் சம்பவம்: சொற்பக் காயமுற்ற பயணிகளுக்கு US$10,000 இழப்பீடு வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர்:
SQ321 விமானச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கேட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட 211 பயணிகளுக்கு இழப்பீடு தருவதாக அறிவித்துள்ளது.
கடந்த மே 20-ஆம் தேதி விமானம் நடுவானில் கடுமையாக ஆட்டம் கண்டதில் பல பயணிகள் காயமடைந்தனர்.
SQ321 லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத அந்தச் சம்பவம் நேர்ந்தது.
சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
73 வயது பயணி மாண்டார்.
இழப்பீட்டின் விவரங்கள் மின்னஞ்சல் வாயிலாக இன்று பயணிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக SIA கூறியது.
இலேசாகக் காயமுற்றவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும்.
கடுமையாகக் காயமுற்றவர்கள் உடல்நலம் தேறியதும் நிறுவன அதிகாரிகளை நேரில் சந்தித்துத் தங்களுக்குச் சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகையைப் பேசி முடிவெடுக்கலாம் என்றது SIA.
கடுமையான காயங்கள் மருத்துவப் பரிசோதனை வழி உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள், நீண்டகால மருத்துவக் கவனிப்பும் பண உதவியும் தேவைப்படும் பயணிகள் ஆகியோருக்கு முன்பணமாக US$25,000 கொடுக்கப்படும்.
அது அவர்களது உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவும்.
அவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் மொத்த இழப்பீட்டுத் தொகையின் ஒருபகுதியாகவும் அஃது இருக்கும் என்றது நிறுவனம்.
பயணிகள் அனைவருக்கும் விமானச்சீட்டுக்கான முழுத்தொகை திருப்பித் தரப்படும்.
விமானப்பயணம் தாமதமடைந்ததற்கான இழப்பீடும் வழங்கப்படும்.
விமானத்திலிருந்த 18 சிப்பந்திகளுக்கு இழப்பீடு வழங்கும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 4:06 pm
ஆஸ்திரேலியாவில் ஆண்களுக்கு எதிராக இணையப் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
July 14, 2026, 9:58 pm
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைத் தரைமட்டமாக்கி வருகிறது ஈரான் இராணுவம்
July 14, 2026, 11:34 am
மெக்சிகோ நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 10 பேர் பலி
July 14, 2026, 10:42 am
இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை: இதுவரை 2,700 பேர் வரை உயிரிழப்பு
July 14, 2026, 10:23 am
காட்டெருமை முட்டித் தூக்கி வீசியதில் 8 அடி உயரம் பறந்த முதியவர்
July 13, 2026, 11:37 am
பெங்கொக் இரவு கேளிக்கை மையத்தில் தீ விபத்து: 27 பேர் பலி
July 12, 2026, 7:53 pm
டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
July 12, 2026, 11:53 am
