
செய்திகள் மலேசியா
பள்ளி பேருந்து, விரைவு மற்றும் சுற்றுலா பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கூடாது: அந்தோனி லோக்
ஜார்ஜ் டவுன்:
டீசலுக்கான மானியம் நீக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகளை இயக்குபவர்கள் கட்டணத்தை உயர்த்தக் கூடாது போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கேட்டுக் கொண்டார்.
இம்மூன்று பேருந்து நடத்துநர்களுக்கு டீசல் விலை உயர்வால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவர்களுக்குத் தொடர்ந்து டீசலுக்கான மானியம் வழங்கப்படுவதால் அவர்கள் பேருந்து கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்றார் அவர்.
பள்ளிப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகள் இயக்குபவர்களுக்கு ஒரு லிட்டர் டீசல் 1.88 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
டீசல் மானியத்தைக் காரணம் காட்டி பள்ளிப் பேருந்து அல்லது விரைவுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று அவர் கூறினார்.
விரைவுப் பேருந்துகளுக்கு, தரைவழிப் போக்குவரத்து முகமையின் (APAD) மேற்பார்வையில் இருப்பதால், கட்டணத்தை விருப்பப்படி உயர்த்த முடியாது என்று அவர் எச்சரித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm