நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டீசலுக்கான உதவித் தொகை அகற்றப்பட்டதால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்த்தப்படாது: பிரெஸ்மா

கோலாலம்பூர்:

டீசலுக்கான உதவித் தொகை அகற்றப்பட்டதால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் உணவுகளின் விலை உயர்த்தப்படாது

பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை உறுதியாக கூறினார்.

உதவித் தொகை அகற்றப்பட்டதால் தற்போது டீசல் 3.35 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.

இதனால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் உணவு, பானங்களின் விலையில் எந்த உயர்வும் இருக்காது.

தற்போது, ​​நாடு முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட பிரெஸ்மா உறுப்பினர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய விலையை நிலை நிறுத்த முடியும்.

இந்த விவகாரத்தில் நாங்கள் சமூக கடப்பாட்டுடன் நடந்துக் கொள்கிறோம்.

விலையை எங்களால் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியும். யாராவது விலையை உயர்த்த வேண்டும் என்றால் அது குறித்து எந்த முடிவும் எடுக்க மாட்டோம்.

ஆகவே பிரஸ்மா உறுப்பினர்கள் டீசல் விலை அதிகரிப்பை காரணம் காட்டி உணவகங்களில் உணவு, பானங்களின் விலையை உயர்த்த வேண்டாம் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset