
செய்திகள் உலகம்
பிரான்சில் இம்மாதம் தேர்தல் நடத்தப்படும்: மெக்ரோன் தீடீர் அறிவிப்பு
பாரிஸ்:
பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன், பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தல் இம்மாதம் நடைபெறும் என்று திடீரென அறிவித்துள்ளார்.
அதிபர் மெக்ரோனின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இம்மாதம் நடத்தப்பட்டால் அதில் அதிபர் மெக்ரோன் தோல்வி அடைவதற்கான சாத்தியம் அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அடுத்த தேர்தலை நடத்த இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதிபர் மெக்ரோனின் இந்த முடிவு வியப்பளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் புறக்கணித்து விட முடியாது என்று அதிபர் மெக்ரோன் கூறினார்.
கீழவைத் தேர்தல் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும் என்றும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:43 am
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
June 21, 2025, 11:16 am
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
June 20, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
June 20, 2025, 11:07 am
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
June 19, 2025, 5:18 pm
தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?
June 19, 2025, 4:18 pm
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
June 19, 2025, 4:15 pm