நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கழிவறையில் இருந்தபடியே இயங்கலை கூட்டத்தில் பங்கேற்க நகராண்மைக் கழகத் தலைவர் 

ரியோ டி ஜெனெய்ரோ: 

கழிவறையில் இருந்தபடியே இயங்கலை கூட்டத்தில் பங்கேற்ற நகராண்மைக் கழகத் தலைவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் பிரேசில் நாட்டின் பிரேசிலிய்யா பகுதியில் நிகழ்ந்துள்ளது. இயங்கலை கூட்டத்தில் இணைந்த நொடியில் கழிவறையில் இருந்ததை இயங்கலை கூட்டத்தில் பங்கெடுத்த இதர உறுப்பினர்களும் கண்டுப்பிடித்தனர். 

இதனால் தமது காமெராவை OFF செய்யும்படி கூட்டத்தில் பங்கெடுத்த ஆடவர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.  இது தொடர்பான காணொலி ஒன்று பொதுமக்களால் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. 

இதேபோல் அமெரிக்காவிலும் கார் செலுத்திக்கொண்டே ஆடவர் ஒருவர் நீதிமன்ற  வழக்கினை எதிர்கொண்டு வந்தார் என்று செய்தி பேசுப்பொருளாக அமைந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset