நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'Malaysia Madani-Jiwa Merdeka' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இவ்வாண்டின் சுதந்திரத் தினம் கொண்டாடப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில் 

புத்ரா ஜெயா: 

இவ்வாண்டுக்கான சுதந்திரத் தினம், மலேசியத் தினத்திற்காக சின்னமாக மலேசிய மடானி சின்னம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

மேலும், 'Malaysia Madani-Jiwa Merdeka' என்ற கருப்பொருளோடு இவ்வாண்டு சுதந்திரத் தினம் கொண்டாடப்படுகின்றது.  

Malaysia Madani ஆறு முக்கிய அடிப்படை மதிப்புகளின் ஆதரவின் மூலம் நாட்டின் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தின் முதுகெலும்பாகும்.

Jiwa Merdeka சிந்தனை, சமூக மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு, வலுவான, இணக்கமான மற்றும் முற்போக்கான மக்களின் ஒற்றுமையை உருவாக்குவதன் மூலம் தேசபக்தி உணர்வை விளக்குவதில் எந்த எதிர்மறையான கூறுகளிலிருந்தும் மக்களின் சுதந்திரத்தை வெளிப்படுத்துகிறது என்பதை விளக்குகின்றது. 

2024 ஆம் ஆண்டுக்கான சுதந்திரத் தினம், மலேசியத் தினத்திற்கான சின்னம் மற்றும் கருப்பொருள் அறிவிப்பு விழாவில் ஃபஹ்மி ஃபாட்சில் இதனைத் தெரிவித்தார்.

சுதந்திர மாதம் மற்றும் ஜாலூர் கெமிலாங் கொடி பறக்கவிடும் விழா ஜூலை 13 அன்று நடைபெறும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset