
செய்திகள் கலைகள்
ஈப்போ லிட்டில் இந்தியாவுக்கு நகைச்சுவை நடிகர்கள் கிங்காங், முத்துகாளை சிறப்பு வருகை
ஈப்போ:
சினிமா துறையில் தொடர்ந்து பீடு நடைபோட்டு வரும் நகைச்சுவை நடிகர் சங்கர் ஏழுமலை (கிங்காங்) ஈப்போவில் உள்ள லிட்டில் இந்தியா வர்த்தக மையத்திற்கு வருகை அளித்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
அவருடன் நகைச்சுவை நடிகர் முத்துகாளையும் வருகை புரிந்தார்.
ஈப்போவில் நடைபெற்ற புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற காலத்தை வென்றவன் நிகழ்வில் கலந்துகொள்ள இவர்கள் வருகை புரிந்தனர்
முன்னதாக ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்திற்கு வருகை அளித்த அவர்களை டி. எஸ்., பி வி நகைக்கடை இயக்குனர் டத்தோ அமாலுடின் வரவேற்றார்.
இவர்களின் வருகை கடைத் தெருவில் இருந்த வணிகர்கள், வாடிக்கையாளர் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் அங்கு வந்திருந்த செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கிங் காங், குள்ளமானர்களுக்கும் சினிமா துறை வாய்ப்பு வழங்கி வருகிறது.
அந்த வரிசையில் சினிமாவில் வளர்ந்து வந்துள்ளதாகவும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1988 ஆம்ஆண்டு முதல் படங்களில் நடிக்க தொடங்கினேன். அதில் சென்னை எக்பிரஸ் படத்தில் நடிகர் ஷாருகானுடன் நடித்துள்ளது மேலும் சினிமா துறையில் தம்மை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் சென்றது.
அந்த படத்தில் நடிக்க பல குள்ளமான நடிகர்கள் அழைக்கப்பட்டனர்.
அதில் எனக்கு மட்டும் அந்த படத்தில. நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்
கடந்த 36 ஆண்டுகள் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன் தொடர்ந்து நடிப்பேன். பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருவதாகவும் தெரிவித்தார்.
சினிமாவில் ஸ்டான்ட் நடிகராக நுழைந்து இன்று நகைச் சுவை நடிப்பில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் மற்றொரு நடிகர் முத்துகாளை ஈப்போவிற்கு வருகை அளித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்
அவர் அளித்த பேட்டியில், 1986ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து 1997ஆம் ஆண்டு சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக நடித்து இன்று நகைச்சுவை நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பதாகவும்
பல முன்னணி நடிகர்களுடன் நடித்தும்உள்ளேன். வைகைப் புயல் அண்ணன் வடிவேல் தனது எல்லா படங்களிலும் எனக்கு வாய்ப்பளித்ததை என்றும் நான் நன்றியுடன் கூறுவேன் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 6:22 pm
நடிகை வனிதா விஜயகுமார் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்தார்
July 14, 2025, 1:09 pm
இந்திய திரையுலகின் பிரபல பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
July 12, 2025, 8:14 pm
வடிவேலு சார் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்: ஷில்பா ஷெட்டி புகழாரம்
July 10, 2025, 11:04 am
பாக்கிஸ்தான் நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm