
செய்திகள் மலேசியா
புந்தோங் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 11ஏ பெற்று சாதனை
ஈப்போ:
இடைநிலைப்பள்ளிகளில் வெளியான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 11ஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புந்தோங் வட்டாரத்தில் ஸ்ரீ புத்ரி பெண்கள் இடைநிலைப் பள்ளியில் இங்குள்ள 5 தமிழ்ப்பள்ளியை பின்னணி கொண்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இம்முறை 3 மாணவிகள் 11 ஏ பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இவர்களில் நேசமணி விக்டர், அனக லெச்சிமி வேலாயுதம், பாக்கியலெச்சிமி ஆறுமுகம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இம்மாணவிகளை தவிர்த்து கார்த்திகா நீலமேகம் 10ஏ 1 பி மற்றும் நர்மித்தா பொன்னிராஜா, கவின்மலர் நல்லகுமார், பகவதி கார்த்திகேசு ஆகியோர் 9ஏ கிடைக்கப்பெற்ற மாணவிகளாவர்.
இம்முறை புந்தோங்கின் ஆண்கள் இடைநிலைப்பள்ளி மாணவன் தனு அக்சை சிவசுப்பிரமணியம் 9 ஏ பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவர்களில் பெரும்பாலோர் திட்டமிட்டு நேரத்தை நன்கு நிர்வகித்து பாடங்களை படித்து வந்ததால் இத்தகைய சிறந்த தேர்வு முடிவு கிடைத்துள்ளதாக கூறினர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்பணிப்பு மற்றும் தியாக மனப்பான்மையால் வெற்றி பெற்றதாக கருத்துரைத்தனர்.
- ஆர்.பாலசந்தர்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 9:38 am
மகன் மரணத்தில் தொடர்புடைய வழக்கில் தந்தைக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல்: போலிஸ்
July 28, 2025, 11:01 pm
அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இந்தோனேசியா சென்றடைந்தார்
July 28, 2025, 9:59 pm
உடனடி போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து, கம்போடியா ஒப்புக் கொண்டன: பிரதமர் அன்வார் அறிவிப்பு
July 28, 2025, 4:30 pm
அன்வார் எதிர்ப்பு பேரணி: செகுபார்ட் கைது
July 28, 2025, 4:14 pm
தாய்லாந்து, கம்போடியா மோதல் குறித்து விவாதிக்கும் சிறப்பு கூட்டம்: புத்ராஜெயாவில் தொடங்கியது
July 28, 2025, 4:11 pm