நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புனித ஹஜ்ஜுப் பயண முகவர்கள் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையிடம் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்: சிங்கப்பூர் அரசு அறிவிப்பு 

சிங்கப்பூர்:

இந்த ஆண்டு புனித ஹஜ்ஜுப் பயணத்தை முன்னிட்டு அனைத்துப் பயண முகவர்களும் நியமிக்கப்படும் அதிகாரிகளும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையிடம் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.

உயிர்க்காப்பு, நெருக்கடிகாலத் தயார்நிலை போன்றவை பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்படும்.

ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ளும் 900 சிங்கப்பூரர்களுடன் மருத்துவ அதிகாரிகளும் செல்கின்றனர்.

சிங்கப்பூர் யாத்ரீகர்கள் விவகார அலுவலகம் சவுதியைத் தளமாகக் கொண்ட மருத்துவச்சேவை அமைப்புடன் இணைந்து செயல்படவிருக்கிறது.

ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொள்வோருக்காக ஏற்பாடுசெய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் அதுகுறித்து அறிவிக்கப்பட்டது.

பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் சென்றுவருவதற்காக அந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான் (Maliki Osman) அந்த ஆண்டு ஹஜ்ஜுப் பயண ஏற்பாடுகளை வழிநடத்துகிறார்.

சிங்கப்பூரிலிருந்து முதல் குழு ஜூன் 3ஆம் தேதி புறப்படவிருக்கிறது.

ஆதாரம் : CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset