நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரின் 4ஆவது பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்றார்

சிங்கப்பூர்:

லாரன்ஸ் வோங் (Lawrence Wong) இன்று சிங்கப்பூரின் 4ஆவது பிரதமராகப் பதவியேற்றார். 

பதவியேற்புச் சடங்கு இரவு 8 மணிக்கு இஸ்தானாவில் தொடங்கியது.

800க்கும் அதிகமானோர் பதவியேற்புச் சடங்கைக் காண இஸ்தானாவில் திரண்டிருந்தனர். 

நாட்டின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திரு வோங், மாறுபட்ட தலைமைத்துவப் பாணியைப் பின்பற்றுவதற்கு உறுதியளித்தார்.

சிங்கப்பூர்க் கதையின் சிறந்த அத்தியாயங்கள் எழுதப்படவேண்டும் என்றார் அவர்.

அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் முன்னிலையில் பதவியேற்புச் சடங்கு இடம்பெற்றது.

நாட்டின் தலைமைத்துவ மாற்றம் சுமுகமாகவும் சீராகவும் நடைபெற்றதை அவர் பாராட்டினார்.

தலைமைத்துவ மாற்றம் அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாத்திருக்கிறது என்றார் அதிபர்.

அத்துடன் அரசாங்கம் நீண்ட காலத்துக்குத் திட்டமிடவும் அது வழியமைத்திருப்பதாக அவர் சொன்னார்.

நாடு பொறுப்பானவர்களின் கையில் இருக்கிறது என்று அதிபர் தர்மன் சிங்கப்பூரர்களுக்கு உத்தரவாதம் அளித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset