நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் ஜெயா உத்திர காளியம்மன் ஆலயத்திற்கு மானியம்: மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் வழங்கினார்

பெட்டாலிங் ஜெயா:

பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ மகா உத்திர அம்மன் ஆலயத்திற்கு மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சிறப்பு வருகை புரிந்தார்.

இந்த வருகையின் போது அவர் ஆலயத்திற்கு 30,000 ரிங்கிட் மானியம் வழங்கினார்.

ஆலயத்தின் வருடாந்திர திருவிழா விரைவில் நடைபெறவுள்ளது. அத் திருவிழா சுமூகமாக நடைபெற இந்நிதி பயன்படும்.

அதே வேளையில் இந்நிதியை கொண்டு வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக ஆலயத்தை சுற்றியுள்ள சாலைகள், கால்வாய்கள் சீரமைக்கப்படும் என எனக்கு தெரிவிக்கப்பட்டது.

இந் நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறும் என தாம் நம்புவதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலமாகும். ஆகையால் அவர்கள் அமைச்சின் தொழில்  திறன் கல்வியை பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இது தான் இங்குள்ள இளைஞர்களுக்கு எனது ஆலோசனை என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset