நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: 4 குண்டுகள் பாய்ந்தன 

பிராடிஸ்லாவா:

துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ (59) நிலை கவலையளிப்பதாக அவரின் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஹாண்ட்லோவா நகரில் கலாச்சார மையத்துக்கு வெளியே அவர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் ராபர்ட்டின் வயிற்றில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளன.

தலைநகருக்கு 150 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு தனது ஆதரவாளர்களை சந்திக்க பிரதமர் வந்துள்ளார். அவரை தாக்கியதாக கருதப்படும் நபரை காவலர்கள் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

Slovak PM Robert Fico Shot Multiple Times After Cabinet Meeting, Suspect  Detained

ஸ்லோவாகியா பாராளுமன்றத்தின் துணை சபாநாயகர் இந்த நிகழ்வை உறுதிப்படுத்தியதோடு தேதி குறிப்பிடாமல் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

இது தொடர்பாக ஸ்லோவாகியா நாட்டின் அதிபர் ஸூஸனா காபுடோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் ராபர்ட் விரைவில் குணமாக வேண்டும் எனவும் அதற்கான ஆற்றல் பெற பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மூன்று வாரங்களில் நடக்கவுள்ள நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த 59 வயதான ஸ்லோவாகியா பிரதமரின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 27 நாடுகளில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் வலதுசாரி கட்சிகள் ஆதாயம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset