நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இந்திய அதிகாரி பலி

நியூயார்க்:

இஸ்ரேல் நடத்திவரும் மனிதாபிமானமற்ற துப்பாக்சிச் சூட்டில் இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியும், ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியுமான 46 வயதான வைபவ் அனில் காலே உயிரிழந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சேர்ந்த வைபவ், அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ராஃபா நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு ஐ.நா.வாகனத்தில் வைபவ் அனில் திங்கள்கிழமை சென்றபோது, அந்த வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் வைபவ் அனில் உயிரிழந்தார். ஐ.நா. பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மற்றொரு அலுவலர் காயமடைந்தார்.

ஐ.நா.வுக்காக பணியாற்றிய வெளிநாட்டவர் ஒருவர் தாக்குதலில் முதல்முறையாக உயிரிழந்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset