
செய்திகள் உலகம்
பொருளியல் மந்தநிலையால் நியூசிலாந்திலிருந்து வெளியேறும் மக்கள்
வெலிங்டன்:
நியூசிலாந்தில் பொருளியல் மந்தநிலை காரணமாக வேலை வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன.
இதன் காரணமாக முன்பு இல்லாத அளவில் அந்நாட்டு மக்கள் பலர் அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
மார்ச் மாதம் நிலவரப்படி நியூசிலாந்துக் குடிமக்கள் 78,200 பேர் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்ததாக நியூசிலாந்துப் புள்ளிவிவரத்துறை தெரிவித்தது.
பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 74,900ஆக இருந்தது.
நியூசிலாந்திலிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வோர் எண்ணிக்கை முதல்முறையாக 50,000க்கும் அதிகமாகப் பதிவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
உயர் வட்டி விகிதங்களால் பயனீட்டாளர்கள் முன்பு போல அதிகம் செலவு செய்வதில்லை.
அதுமட்டுமல்லாது, வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வேலைக்கு ஆள்சேர்ப்பதும் குறைந்துள்ளது.
இதன் விளைவாக வேலை கிடைக்காமல் தவிக்கும் நியூசிலாந்து நாட்டினர் பலர் ஆஸ்திரேலியாவுக்கும் மற்ற நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.
நியூசிலாந்தில் வழங்கப்படும் சம்பளத்தைவிட வெளிநாடுகளில் அவர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நியூசிலாந்து மக்களை ஈர்க்க ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையும் காவல்துறையும் அவர்களுக்கு உயர் சம்பளம் மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன.
நியூசிலாந்திலிருந்து வெளியேறும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் வேளையில், அங்கு இடம்பெயரும் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி 139,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தனர்.
ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருகின்றது.
நியூசிலாந்துக்கு இடம்பெயரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்து மாதங்களாகச் சரிந்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
October 12, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்
October 11, 2025, 12:25 pm