நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை: NTA விளக்கம்

புது டெல்லி:

நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை என்றும் அது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்றும் அத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை NTA தெரிவித்தது.

நீட் தேர்வு இந்தியாவில் 557 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தநிலையில், நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக, சமூக ஊடகங்களில் நீட் வினாத் தாள் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை மறுத்த என்டிஏ அதிகாரிகள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் ஹிந்தி மொழித் தேர்வர்களுக்கு தேர்வு மைய அதிகாரி தவறுதலாக ஆங்கில மொழி கேள்வித் தாளை விநியோகம் செய்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில மாணவர்கள், தேர்வு மையத்திலிருந்து விதிகளை மீறி அந்த வினாத்தாளுடன் வெளியேறி வினாத்தாளை புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஆனால், அதற்குள்ளாக மற்ற மையங்களில் நீட் தேர்வு தொடங்கிவிட்டது என்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset