நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூரில் ஒரே ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர்

புது டெல்லி:

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டில் இனக் கலவரம் காரணமாக  67,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இது தெற்காசியாவில் 69,000 பேர் இடம்பெயர்வில் 97 சதவீதமாகும் என்று சர்வதேச உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் ITMC தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது.

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரும் மைதேயி சமூகத்தினருக்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கவலரமாக வெடித்தது.

இருதரப்பினர் மோதல்களால் மாநிலமே போர்க் களம்போல் மாறியுள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் 50,000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ITMC மணிப்பூரில் கடந்த ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்று தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset