
செய்திகள் இந்தியா
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
கோழிக்கோடு:
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுமிக்கு கைவிரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாய்சேய் நலப் பிரிவுக்கு கையில் உள்ள 6 ஆவது விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக 4 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்ததும் சிறுமியின் வாயில் பஞ்சு திணிக்கப்பட்டிருந்ததை அவரது பெற்றோர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்களிடம் சிறுமியின் பெற்றோர் கேள்வி எழுப்பினர். அப்போதுதான் விரலை அகற்றுவதற்குப் பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தவறுதலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் இதுதொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா உத்தரவிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am