செய்திகள் இந்தியா
இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு: மம்தா திடீர் முடிவு
கொல்கத்தா:
இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் திரிணமூல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு மம்தா தொகுதி ஒதுக்கவில்லை. இந்நிலையில், இந்தியா கூட்டணி வென்று ஆட்சி அமைத்தால் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும்.

கூட்டணி ஆட்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வெளியில் இருந்தே வழங்குவோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளநிலையில், தனித்து போட்டியி்டும் மம்தா வாக்காளர்களை கவர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2026, 10:20 am
இந்தியத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமாருக்கு எதிராக லண்டனில் மாணவர்கள் போராட்டம்
October 14, 2026, 11:39 am
பீகார் மாநிலத்தில் சோகம்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 13 சிறுவர்கள் உயிரிழப்பு
October 13, 2026, 10:34 pm
டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டம்: மாணவர் அமைப்பினர் மீது கண்மூடித்தனமாக தாக்கிய போலிஸ்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
